சீக்கிய பிரிவினைவாதி நஜ்ஜாரின் கொலையில் பிரதமர் மோடி மற்றும் தேசிய பாதுகாப்பு ஆலோசகருக்கு தொடர்பு உள்ளது என வெளியான பத்திரிகை செய்தியை, இந்தியாவின் கடும் எதிர்ப்பை தொடர்ந்து, கனடா அரசு மறுத்துள்ளது. கனடா பிரதமரின் தேசிய பாதுகாப்பு மற்றும் உளவுத்துறை ஆலோகர் அலுவலக அதிகாரியான Nathalie G Drouin என்பவர் வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிக்கையில், நஜ்ஜாரின் கொலையில் இந்திய பிரதமர் மோடி, வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் ஆகியோருக்கு பங்கு இருப்பதாக கனடா அரசு கூறவில்லை என தெரிவித்துள்ளார். இது தொடர்பாக வெளியான செய்திகள் தவறானவை மற்றும் யூகத்தின் அடிப்படையில் உருவானவை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.