அமெரிக்க அதிபர் டிரம்ப் பேச்சை திரித்து வெளியிட்ட புகாரில் பிபிசி மன்னிப்பு கேட்ட போதிலும் டிரம்ப் அந்நிறுவனத்தின் மீது 5 பில்லியன் டாலர் கேட்டு வழக்கு தொடர உள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளன. கடந்த 2021ம் ஆண்டு டிரம்ப் பேசிய இரு வேறு உரைகளை இணைந்து ஆவணப்படம் வெளியிட்ட பிபிசி, அதில் டிரம்ப்பின் பேச்சு கேபிடல் ஹில் கலவரத்தை தூண்டும் விதமாக இருப்பது போல் சித்தரித்திருந்தது. தனது உரையை திரித்து வெளியிட்டதாக டிரம்ப் வைத்த குற்றம்சாட்டில் பிபிசி நிறுவனத்தின் டைரக்டர் மற்றும் செய்திப்பிரிவு தலைவர் தங்கள் பதவியை ராஜினாமா செய்தனர். பிபிசி நிறுவனமும் மன்னிப்பு கோரிய நிலையில், பிபிசியின் மன்னிப்பு போதுமானதாக இல்லை என்ற டிரம்ப் தனது நற்பெயருக்கும் நீதிக்கும் தீங்கு விளைவித்ததற்காக வழக்கு தொடரப்படும்