வெளிநாட்டு நிறுவனங்கள் அமெரிக்காவில் முதலீடு செய்வது மட்டுமல்லாமல், அமெரிக்க தொழிலாளர்களுக்கு பயிற்சி கொடுக்க வேண்டும் என அதிபர் டொனால்ட் டிரம்ப் வலியுறுத்தி உள்ளார். கப்பல் கட்டுதல், உயர் தொழில்நுட்ப இயந்திரங்கள் போன்ற தொழில்களில் மேம்பட்ட உற்பத்தித் திறன்களை, அமெரிக்க தொழிலாளர்கள் கற்றுக்கொள்ள வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்திய டிரம்ப், மிகவும் சிக்கலான மற்றும் உயர் தொழில்நுட்ப தயாரிப்புகளை தயாரிப்பதற்கு அமெரிக்காவிற்கு வரும் வெளிநாட்டு நிறுவனங்கள் தங்களுடன் நிபுணத்துவம் வாய்ந்தவர்களை அழைத்து வந்து அமெரிக்க மக்களுக்கு பயிற்சி கொடுக்க வேண்டும் என்றார்.