இணைய உலகத்தில் ஆன்மீகப் பணியாற்றிய 15 வயது இத்தாலிய சிறுவன் கார்லோ அகுடிஸ் ((Carlo Acutis)) உள்பட இருவருக்கு புனிதர் பட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. கணினித் திறமையைப் பயன்படுத்தி கத்தோலிக்க விசுவாசத்தைப் பரப்பிய கார்லோ அகுடிஸ், மில்லினிய யுகத்தின் முதல் புனிதர் என்று அறியப்படுகிறார். அத்துடன் அவருக்கு புனிதர் பட்டம் வழங்குவதற்கான ஏற்பாடுகளும் போப் பிரான்சிஸ் காலத்திலேயே நடந்தன. ஆனால் பிரான்சிஸ் மறைவால் இந்த விழா தள்ளி வைக்கப்பட்டது. இதைப்போல இத்தாலியில் பிறந்து தனதுவாழ்நாள் முழுவதும் ஏழைகளுக்காக வாழ்ந்து மறைந்த பையர் ஜார்ஜியோ பிரசாட்டியும்((Giorgio Frassati)) புனிதராக போப் 14-ம் லியோவால் அறிவிக்கப்பட்டார்.