ஈஸ்டர் பண்டிகையை முன்னிட்டு வாடிகனில் உள்ள தேவாலயத்திற்கு வெளியே வந்த போப் பிரான்சிஸ் அங்கிருந்த அனைவரையும் ஆசீர்வாதித்தார். உடல் நலக்குறைவு காரணமாக சிகிச்சை பெற்று திரும்பிய போப் பிரான்சிஸ் இரண்டு மாதங்கள் ஓய்வு எடுக்க மருத்துவர்கள் அறிவுறுத்தி இருந்த நிலையில், ஈஸ்டர் பண்டிகையை முன்னிட்டு பொதுவெளியில் தோன்றினார்.