வாடிகனில் முதன்முறையாக உலக முழுவதிலும் உள்ள செய்தியாளர்களை சந்தித்த போப் 14-ம் லியோ, பத்திரிகையாளர்கள் "வார்த்தைகளின் போரை" முடிவுக்குக் கொண்டுவர உதவுமாறும், வெறித்தனம் மற்றும் வெறுப்புக்கு இடம் கொடுக்காமல் இருக்குமாறும் கேட்டுக்கொண்டார். மேலும் தங்கள் வேலைகளைச் செய்ததற்காக சிறையில் அடைக்கப்பட்ட செய்தியாளர்களை விடுவிக்கவும் உலக நாடுகளுக்கு அழைப்பு விடுத்தார்.