போப் 14ம் லியோ சமூக வலைதளங்களை பயன்படுத்துவதாக வாடிகன் பத்திரிகை அலுவலகம் அறிவித்தது. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட போப்பாண்டவர் 14ம் லியோ, தனது முன்னோடிகளான 16ம் பெனடிக்ட் மற்றும் பிரான்சிஸ் ஆகியோர் 'X' தளத்தில் பயன்படுத்திய அதே Pontifex கணக்கை வைத்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.