விமானக் கண்காட்சிக்கான ஒத்திகையின் போது போலந்து விமானப்படையின் F-16 போர் விமானம் தரையில் விழுந்து வெடித்து சிதறியதில் விமானி உயிரிழந்தார். இந்த விபத்தைத் தொடர்ந்து, வார இறுதியில் நடத்த திட்டமிடப்பட்டிருந்த விமானக் கண்காட்சி ரத்து செய்யப்பட்டுள்ளது. விமானி உயிரிழப்புக்கு இரங்கல் தெரிவித்த அந்நாட்டு பாதுகாப்புத்துறை அமைச்சர் கோசினியாக்-காமிஸ் ((Kosiniak-Kamysz)), விமானியின் இழப்பு விமானப்படைக்கும் முழு போலந்து இராணுவத்திற்கும் பெரும் இழப்பு என்றார். இந்நிலையில் போலந்து விமானப்படையின் F-16 போர் விமானம் தரையில் விழுந்து வெடித்து சிதறும் வீடியோ காட்சி இணையத்தில் வைரலாகியுள்ளது.