லண்டன் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் இன்று இரவு நடைபெறும் கருத்தரங்கில் பெரியாரின் உருவ படத்தை முதலமைச்சர் மு.க ஸ்டாலின் திறந்து வைக்க உள்ளார். சுயமரியாதை இயக்கத்தின் நூற்றாண்டினை ஒட்டி உலகப்புகழ்பெற்ற ஆக்ஸ்போர்டு பல்கலைகழகத்தில் இன்று மற்றும் நாளை நடைபெறும் கருத்தரங்கில் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று சிறப்புரையாற்ற உள்ளார். மேலும், சுயமரியாதை இயக்கம் குறித்த தி திரவிடியன் பாத்வே மற்றும் தி கேம்பிரிட்ஜ் கம்பானியன் டூ பெரியார் என்ற இரு நூல்களையும் வெளியிடுகிறார். முன்னதாக நியூயார்க் பல்கலைக்கழகப் பேராசிரியர், UK-வில் உள்ள இந்திய உயர் ஆணையத்தின் பொருளாதாரத் துறை அமைச்சர் உள்ளிட்ட உயர் அதிகாரிகளுடன் கலந்துரையாடுகிறார்.