இந்த ஆண்டின் முதல் சூப்பர் மூன் நிகழ்வை பல்வேறு இடங்களில் மக்கள் கண்டு ரசித்ததோடு, இருள் போர்த்திய வானில் ஒளிர்ந்த நிலவினை கண்டு மகிழ்ந்தனர். நிலவு தனது நீள்வட்ட பாதையில் பூமியை மிக நெருங்கி வரும் போது இந்த சூப்பர் மூன் நிகழ்வு ஏற்படுவதாகவும், வழக்கமாக தெரியும் அளவை விட 14 சதவிகிதம் பெரிதாகவும் 30 சதவிகிதம் கூடுதல் பிரகாசத்துடனும் நிலவு காட்சியளித்தது. இந்தாண்டின் இறுதிக்குள் மேலும் ஒரு சூப்பர் மூன் வானில் தென்பட உள்ளதாக கூறப்படுகிறது.