ஸ்பெயின் நாட்டில் வெள்ள பாதிப்பால் வீடுகளுக்குள் தேங்கிய சகதிகளை அகற்றும் பணியில் மக்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். வரலாறு காணாத கனமழையால் ஏற்பட்ட வெள்ளம் வடிந்துவிட்டாலும், வீடுகளிலும் தெருக்களிலும் சேறும் சகதியுமாக காட்சியளிக்கிறது. இதனை அகற்றும் பணியில், பொதுமக்களுக்கு உதவியாக தன்னார்வலர்களும் களமிறங்கியுள்ளனர்.