இஸ்ரேல் - ஹமாஸ் இடையே இன்று அமைதி பேச்சுவார்த்தை தொடங்க உள்ளது. எகிப்தில் நடக்கும் பேச்சுவார்த்தையில் இரு தரப்பு பிரதிநிதிகள் பங்கேற்கின்றனர். இஸ்ரேல் - ஹமாஸ் போரை முடிவுக்கு கொண்டு வர அமெரிக்க அதிபர் டிரம்ப் பரிந்துரைத்த 20 அம்ச அமைதி திட்டத்தை ஏற்க இஸ்ரேல் - ஹமாஸ் ஒப்புதல் அளித்தனர். இதையடுத்து காசாவில் உள்ள சில பகுதிகளில் இருந்து படைகளை திரும்ப பெறுவதாக நெதன்யாகு அறிவித்தார். இருப்பினும் 20 அம்ச திட்டம் குறித்து விரிவாக பேச வேண்டும் என ஹமாஸ் கூறிய நிலையில் எகிப்து தலைநகர் கெய்ராவில் பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது. அமெரிக்காவின் சிறப்பு தூதர், டிரம்பின் மருமகன் முன்னிலையில் இந்த பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது.