ஐக்கிய நாடுகள் சபையில் பயங்கரவாதம் தொடர்பான விவாதத்தில், வழக்கறிஞர் ஒருவர் பயங்கரவாதத்தை ஆதரிக்கும் நாடு என பாகிஸ்தானை விமர்சித்து அந்நாட்டிற்கு தலைகுனிவை ஏற்படுத்தினார். கத்தார் மீதான இஸ்ரேல் தாக்குதல் குறித்து ஐ.நா.வில் விவாதம் நடைபெற்றது. அப்போது, மனித உரிமைகள் வழக்கறிஞர் ஹில்லெல் நியூயர், ஹமாஸ் அமைப்பை ஆதரிக்கும் கத்தாரை விமர்சித்தார். அப்போது குறுக்கிட்ட பாகிஸ்தான் பிரதிநிதிகள் ஹில்லெல் நியூயர் குற்றச்சாட்டுகளை நிராகரிக்கிறோம் என்றனர். இதனையடுத்து ஹில்லெல் நியூயரை மீண்டும் பேச அனுமதித்த ஐநா தலைவர், பேச்சு முடிய 4 நொடிகள் மட்டுமே உள்ளதாக தெரிவித்தார். அந்த நான்கு நொடியை பயன்படுத்திக் கொண்ட ஹில்லெல் நியூயர், பயங்கரவாதத்தை ஆதரிக்கும் மற்றொரு நாடு பாகிஸ்தான் என்றார்.