இந்தியாவுடனான போரை நிறுத்திய அமெரிக்க அதிபர் டிரம்ப் தான் அமைதிக்கான நோபல் பரிசுக்கு தகுதியானவர் என பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரிஃப் கூறினார். அப்போது பின்னால் நின்றிருந்த இத்தாலி பிரதமர் ஜார்ஜியா மெலோனி உணர்ச்சி வசப்பட்டு அய்யய்யோ என்பது போல் வாயை மூடி நின்றது இணையத்தில் வைரலாகி வருகிறது. எகிப்து அதிபர் மற்றும் அமெரிக்க அதிபர் டிரம்ப் தலைமையில் நடந்த காசா அமைதி உச்சி மாநாட்டில் 20 சர்வதேச நாடுகளின் தலைவர்கள் கலந்து கொண்ட நிலையில் போர் நிறுத்த ஒப்பந்தத்தை முறைப்படுத்தும் ஆவணத்தில் டிரம்ப் கையெழுத்திட்டார்.