போர் நிறுத்தத்தை மீறி ஆப்கானிஸ்தான் மீது பாகிஸ்தான் நடத்திய வான்வழி தாக்குதலில் கிரிக்கெட் வீரர்கள் 3 பேர் உட்பட 10 பேர் உயிரிழந்தனர். பலர் காயமடைந்தனர். பாகிஸ்தானின் இந்த காட்டுமிரண்டித் தனமான தாக்குதலுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள ஆப்கான் கிரிக்கெட் வாரியம் வரும் நவம்பர் மாதம் லாகூர் மற்றும் ராவல்பிண்டியில் பாகிஸ்தான் பங்கேற்கும் முத்தரப்பு டி20 தொடரில் இருந்து விலகுவதாக அறிவித்தது. உயிரிழந்த வீரர்கள் கபீர், சிப்கத்துல்லா மற்றும் ஹாரூன் என்பது தெரிய வந்துள்ளது. இதற்கு பதிலடி கொடுப்போம் என ஆப்கான் மூத்த அதிகாரிகள் தெரிவித்துள்ள நிலையில் பாகிஸ்தான்- ஆப்கானிஸ்தான் இடையே தொடர்ந்து பதற்றமான சூழல் நிலவுகிறது.