எல்லையில் 2 நாட்கள் அமைதியைக் கொண்டுவந்த போர் நிறுத்தத்தை மீறி, நேற்று ஆப்கானிஸ்தான் மீது பாகிஸ்தான் தாக்குதலை தொடங்கியது. இதற்கு தகுந்த பதிலடி கொடுக்கப்படும் என்று மூத்த தலிபான் அதிகாரி எச்சரிக்கை விடுத்துள்ளார். பாகிஸ்தான், போர் நிறுத்தத்தை மீறி பாக்டிகா மாகாணத்தில் மூன்று இடங்களில் குண்டுவீசித் தாக்குதல் நடத்தியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.