இந்தியா உடனான போர் நிறுத்த ஒப்பந்தத்திற்கு பிறகு, வான்வெளியை பாகிஸ்தான் மீண்டும் திறந்துள்ளது. இதையடுத்து, பாகிஸ்தானில் விமான போக்குவரத்து தொடங்க உள்ளது. பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக, பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத முகாம்களை இந்தியா தாக்கி அழித்தது. இதையடுத்து, இந்தியா- பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் ஏற்பட்டதால், பாகிஸ்தான் அரசு ஒட்டுமொத்தமாக தனது வான்வெளியை மூடியது. பாகிஸ்தான் வான் பரப்பில் உள்நாட்டு விமானங்கள் உள்பட அனைத்து விமானங்களும் பறக்க தடை விதிக்கப்பட்டது. இந்நிலையில் அந்த தடை நீக்கப்பட்டுள்ளது.