அமெரிக்கா வரை சென்று தாக்க கூடிய கண்டம் விட்டு கண்டம் பாயும் அணுசக்தி பாலிஸ்டிக் ஏவுகணையை பாகிஸ்தான் ராணுவம் ரகசியமாக தயாரித்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்தியா நடத்திய ஆபரேஷன் சிந்தூர் ராணுவ நடவடிக்கைக்குப் பிறகு சீனாவின் உதவியுடன் தனது அணு ஆயுத தளவாடங்களை மேம்படுத்த பாகிஸ்தான் முடிவு செய்து அதன் ஒரு கட்டமாக இந்த பாலிஸ்டிக் ஏவுகணையை உருவாக்கி வருவதாக கூறப்படுகிறது. அமெரிக்க ராணுவ உளவுத் துறை பாகிஸ்தானின் இந்த ரகசிய நடவடிக்கையை கண்டு பிடித்துள்ளதாக தெரிகிறது. இது உறுதி செய்யப்பட்டால், பாகிஸ்தானை தனது அணு ஆயுத எதிரியாக அமெரிக்கா அறிவிக்கும் என கூறப்படுகிறது. தற்போது ரஷ்யா,சீனா மற்றும் வட கொரியாவை அமெரிக்கா தனது அணு ஆயுத எதிரி நாடுகளாக அறிவித்துள்ளது.இதையும் படியுங்கள் : "சாத்தான் வேதம் ஓதுவது போல் உள்ளது.." - இபிஎஸ் கடும் தாக்கு..