தைரியம் இருந்தால் நேரடியாக வந்து எங்களுடன் மோத தயாரா என பாகிஸ்தானின் ராணுவ தளபதிக்கு அங்குள்ள தெஹ்ரீக் இ தாலிபன் பயங்கரவாத அமைப்பு சவால் விடுத்துள்ளது. பாகிஸ்தானிய ராணுவத்தினரை அனுப்பி வைத்து அவர்களை கொல்வதற்கு பதிலாக ராணுவ அதிகாரிகளை பாகிஸ்தான் ராணுவம் அனுப்பி வைக்க வேண்டும் என வீடியோ ஒன்றையும் அந்த அமைப்பினர் அனுப்பி வைத்துள்ளனர்.