பெல்ஜியத்தின் மால்மெடியில் ஆயிரக்கணக்கான முட்டைகளை கொண்டு பாரம்பரிய ராட்சத ஆம்லெட்டை செய்யும் விழா விமரிசையாக நடைபெற்றது. நான்கு மீட்டர் அகலமுள்ள கடாயில் சமையல்காரர்கள் முட்டைகளை உடைத்து ஆம்லெட் தயார் செய்தனர். அது, பார்வையாளர்களுக்கு ஒரு துண்டு ரொட்டியுடன் கிண்ணங்களில் பரிமாறப்பட்டது.