இஸ்ரேல்-ஈரான் போரில் அமெரிக்கா தலையிட்டுள்ளதை தொடர்ந்து ஐந்து மாதங்களில் இல்லாத அளவுக்கு சர்வதேச அளவில் கச்சா எண்ணெயின் விலை உயர்ந்துள்ளது. உலகின் ஒன்பதாவது மிகப்பெரிய எண்ணெய் உற்பத்தியாளரான ஈரான் தினமும் 33 லட்சம் பேரல் கச்சா எண்ணெயை உற்பத்தி செய்கிறது. அதில் பாதியை உள் நாட்டுக்கு பயன்படுத்தும் ஈரான் மீதியை ஏற்றுமதி செய்கிறது. தற்போது ஏற்பட்டுள்ள போரால், உலகின் ஐந்தில் ஒரு பங்கு கச்சா எண்ணெய் போக்குவரத்து நடக்கும் தனது ஹோர்மஸ் ஜலசந்தியை மூட ஈரான் முடிவெடுத்துள்ளது. இதை அடுத்து சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில், சர்வதேச கச்சா எண்ணெய் விலை பேரலுக்கு 80 டாலராக அதிகரித்துள்ளது.இதையும் படியுங்கள் : அதிபர் டிரம்புக்கு எதிராக அமெரிக்காவில் போராட்டம்..