மேற்கு ஆப்பிரிக்க நாடான மாலியில் 5 இந்தியர்கள் கடத்தப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கோப்ரி அருகே மின்மயமாக்கல் திட்டத்தில் பணிபுரியும் ஐந்து இந்தியர்கள், சில ஆயுதமேந்திய நபர்களால் கடத்தப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. இதையடுத்து மற்ற இந்தியர்கள் பாதுகாப்பாக தலைநகர் பமாகோவிற்கு அனுப்பி வைக்கப்பட்டனர். கடத்தல்களுக்கு இதுவரை எந்தக் குழுவும் பொறுப்பேற்கவில்லை. 2021 ஆம் ஆண்டுகளில் நடந்த ஆட்சிக் கவிழ்ப்புகளுக்குப் பிறகு ஆட்சியை கைப்பற்றிய ஜெனரல் அசிமி கோய்டா தலைமையிலான ராணுவக் குழு, அல்-கொய்தா மற்றும் ஐஎஸ்ஐஎஸ் தொடர்புடைய பயங்கரவாதக் குழுவால் அதிகரித்து வரும் வன்முறை அடக்க போராடி வருகிறது.