பிரேசிலின் ரியோ டி ஜெனிரோ நகரில் "ரெட் கமாண்ட்" என்ற போதைப்பொருள் கடத்தல் கும்பலுக்கு எதிராக நடத்தபட்ட தாக்குதலில் இதுவரை 119 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. போலீசார் மற்றும் துணை ராணுவப்படையினர் நடத்திய ஆப்ரேஷனில் 93 துப்பாக்கிகள், 500 கிலோவுக்கும் அதிகமான போதை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.