ரஷ்யா தனது புதிய அணுசக்தி நீர்முழ்கி கப்பலான ”Khabarovsk”-ஐ கடற்படையில் இணைத்தது. Poseidon எனும் நீருக்கடியில் இயங்கும் அணுசக்தி டிரோன்களை சுமந்து செல்லும் வகையில் இந்த நீர்மூழ்கி கப்பல் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த Poseidon அணு ஆயுத ட்ரோன், ஒரு முழு நகரையே செயற்கை சுனாமி மூலம் அழிக்கும் அளவுக்கு பயங்கர சக்தி கொண்டது என சொல்லப்படுகிறது. இந்த சக்தி வாய்ந்த ட்ரோனை கடந்த 29ம் தேதி ரஷ்யா வெற்றிகரமாக சோதித்து பார்த்தது குறிப்பிடத்தக்கது.