அமெரிக்க ராணுவ அணிவகுப்பிற்கு பாகிஸ்தான் ராணுவ தளபதி அசிம் முனீர் அழைக்கப்பட்டதாக வெளியான தகவலை வெள்ளை மாளிகை மறுத்துள்ளது. வாஷிங்டனில், அமெரிக்க இராணுவத்தின் 250-வது ஆண்டு விழா மற்றும் அதிபர் டொனால்ட் ட்ரம்ப் பிறந்தநாள் விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இந்த நிகழ்வில் பங்கேற்க பாகிஸ்தான் ராணுவ தளபதியை அமெரிக்கா அழைத்திருப்பதாக கூறப்பட்டது. ஆனால் இது தவறான தகவல் எனவும் எந்த வெளிநாட்டு ராணுவத் தலைவர்களும் அழைக்கவில்லை என வெள்ளை மாளிகை விளக்கம் அளித்துள்ளது.