கண்டம் விட்டு கண்டம் பாயும் அதிபயங்கரமான ஏவுகணையை அறிமுகப்படுத்தி உலகையே மிரள வைத்துள்ளது வடகொரியா. ஆளும் தொழிலாளர் கட்சியின் 80-ஆவது ஆண்டு நிறைவை கொண்டாடும் வகையில், பியோங்யாங்கில் நடைபெற்ற பிரம்மாண்ட ராணுவ அணிவகுப்பின்போது "ஹ்வாசொங்-20" என்கிற இந்த ஏவுகணை அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த ஏவுகணைதான் நாட்டில் இருப்பதிலேயே சக்திவாய்ந்தது என அந்நாட்டு அரசு ஊடகம் தெரிவித்துள்ளது. மேலும், இந்த ஏவுகணையுடன், நீண்டதூர பயண ஏவுகணைகள், ட்ரோன் ஏவுதள வாகனங்கள் மற்றும் தரையிலிருந்து வான் மற்றும் தரையிலிருந்து தரைக்கு பாயும் ஏவுகணைகளும் அணிவகுப்பில் காட்சிப்படுத்தப்பட்டன.