தென் கொரிய புதிய அதிபரின் தாராளவாத கோரிக்கைகளை வட கொரியா நிராகரித்துள்ளது. தலைநகர் பியோங்யாங்கில் பேசிய வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன்னின் சகோதரி கிம் யோ ஜாங், தென்கொரியா எந்த திட்டத்தை வழங்கினாலும் அதில் வடகொரியாவுக்கு எந்த ஆர்வமும் இல்லை என்றார். மேலும் தென்கொரியாவுடன் இது தொடர்பாக எந்த சந்திப்பையும் நடத்த வட கொரியாவுக்கு விருப்பம் இல்லை எனவும் கூறினார். ரஷ்யாவுடன் நெருங்கிய உறவு வைத்துள்ள வட கொரியா, தென் கொரியா மற்றும் அமெரிக்காவின் ராஜதந்திரத்தில் சிக்காது எனவும் கூறப்படுகிறது.