வட கொரியா, ஈரான் மற்றும் மியான்மர் ஆகியவை நிதி நடவடிக்கை பணிக்குழுவின் கருப்புப் பட்டியலில் தொடர்ந்து உள்ளன. பயங்கரவாத நிதியுதவி மற்றும் பணமோசடிக்கு எதிரான உலகளாவிய கண்காணிப்பு அமைப்பான நிதி நடவடிக்கை பணிக்குழு (FATF) பாரிஸை தளமாக கொண்டது. 39 உறுப்பு நாடுகளை கொண்ட இந்த அமைப்பு வட கொரியா, ஈரான் மற்றும் மியான்மர் ஆகிய 3 நாடுகளை சர்வதேச நிதி அமைப்புக்கு கடுமையான ஆபத்தை ஏற்படுத்தும் நாடுகளாக அடையாளம் கண்டுள்ளது. இந்த நாடுகள் சர்வதேசத் தடைகளை எதிர்கொள்ள நேரிடும் எனவும் கூறப்படுகிறது.