அதிபர் டிரம்புக்கு நோபல் பரிசு வழங்க வேண்டும் என்று அமெரிக்கா சென்றுள்ள இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு பரிந்துரைத்துள்ளார். இது தொடர்பாக நோபல் கமிட்டிக்கு அவர் அனுப்பியுள்ள கடிதத்தையும் டிரம்ப்பிடம் வழங்கியுள்ளார். டிரம்ப்புக்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட வேண்டும் என பாகிஸ்தானும் தெரிவித்திருந்தது. இப்போது இஸ்ரேலும் அதனையே வலியுறுத்தியுள்ளது.