அரசு நிதியுதவி தடைபட்டதால் அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசா தற்காலிகமாக முடக்கத்திற்கு ஆளாகியுள்ளது. அரசு நிர்வாக செலவினங்களுக்கான பட்ஜெட் அமெரிக்க நாடாளுமன்றதில் நிறைவேறாததையடுத்து அங்கு அரசு நிர்வாகம் முடங்கியுள்ளது. நிதி ஒதுக்கீடு இல்லாததால், அத்தியாவசியம் அல்லாத பல துறைகளின் சேவைகள் நிறுத்தப்பட்டுள்ளன. மேலும், சம்பளம் வழங்க முடியாததால், ஊழியர்கள் தற்காலிக விடுமுறையில் அனுப்பப்பட்டுள்ளனர்.இந்த அரசு நிர்வாக முடக்கம், உலகின் முன்னணி விண்வெளி ஆய்வு மையமான நாசாவின் பணிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. நாசாவிலும் ஆட்குறைப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாக கூறப்படுகிறது.