அமெரிக்கா-சீனா இடையிலான பரஸ்பர இறக்குமதி வரி விதிப்பு நடவடிக்கை குறித்து இரு நாடுகளும் 2-ஆவது நாளாக ஞாயிற்றுக்கிழமையும் பேச்சுவாா்த்தையில் ஈடுபட்டன. சீனா மீதான வரியை அதிகபட்சமாக 145 சதவீதம் வரை உயர்த்தி அமெரிக்கா அறிவித்தது. இதற்கு பதிலடியாக அமெரிக்க பொருள்களுக்கு 125 சதவீத இறக்குமதி வரி விதித்து சீனா அதிரடி காட்டிய நிலையில் பேச்சுவார்த்தை நீடிக்கிறது.