வங்க தேசத்தின் தந்தை என அறியப்படும் ஷேக் முஜிபுர் ரகுமானின் புகைப்படம் நீக்கப்பட்ட புதிய கரன்சி நோட்டுகள் வங்கதேச அரசு வெளியிட்டது. எந்த ஒரு தனிமனிதன் படமும் இல்லாமல் இந்து கோயில்கள் மற்றும் புத்த மத அடையாளங்களுடன் புதிய நோட்டுகள் வெளியிடப்பட்டன. புதிய கரன்சி நோட்டுகளில் வங்க தேசத்தின் இயற்கை நிலப்பரப்புகள் மற்றும் அடையாளங்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும் என்று வங்கதேச வங்கியின் செய்தித் தொடர்பாளர் ஆரிஃப் ஹொசைன் கான் தெரிவித்தார்.