அமெரிக்க அரசின் வெளிநாட்டு உதவிகளை அதிபர் டிரம்ப் நிறுத்தியதால் உலகளாவிய அளவில் 14 லட்சத்திற்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. டிரம்ப் அதிபரான பின்னர் அரசு செலவினத்தை குறைக்க அவரால் நியமிக்கப்பட்டிருந்த எலான் மஸ்க் அறிவுரையால், இந்த உதவியை நிறுத்துமாறு உத்தரவிட்டார். இதனால். உலக அளவில் விளிம்பு நிலை மக்களுக்கான சுகாதார திட்டங்கள் முடங்கி விட்டன.