வங்கதேச இடைக்கால அரசின் தலைமை ஆலோசகர் முகமது யூனுஸ், மதவாதிகளுடனும், பிளவை ஏற்படுத்தும் சக்திகளுடனும் கைகோர்த்துள்ள்ளதாக எழுத்தாளர் தஸ்லிமா நஸ்ரின் குற்றஞ்சாட்டியுள்ளார். திருவனந்தபுரத்தில் நடைபெற்ற சர்வதேச புத்தகக் காட்சியில் பங்கேற்று பேசிய அவர், மதவெறியர்களின் ஆதரவைப் பெற்று நீண்டகாலம் ஆட்சியில் இருப்பதற்காக, மதச்சார்பற்ற கல்வி நிலையங்கள் மற்றும் அறிவியல் மையங்களை உருவாக்காமல் வங்கதேச அரசு மதப் பள்ளிக்கூடங்களைக் கட்டுவதில் ஆர்வம் காட்டி வருவதாக குற்றம் சாட்டினார்.