மைக்ரோசாப்ட் நிறுவனம் அடுத்த வாரத்தில் மீண்டும் கணிசமான ஊழியர்களை பணிநீக்கம் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இது கடந்த 18 மாதங்களில் மேற்கொள்ளப்படும் நான்காவது பெரிய ஆட்குறைப்பு நடவடிக்கையாக இருக்கும் எனக் கூறப்படுகிறது. இம்முறை Xbox பிரிவு ஊழியர்கள் குறி வைக்கப்படலாம் என்றும், நடப்பு நிதியாண்டு முடிவடைவதற்குள் மைக்ரோசாப்ட் நிறுவனத்தை லாபகரமாக மறு சீரமைக்கும் முயற்சியின் ஒருபகுதியாக இந்த ஆட்குறைப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.