லாவோஸில் பிரதமர் மோடி மற்றும் கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ இடையே சந்திப்பு நிகழ்ந்ததாக வெளியான தகவலை மத்திய அரசு மறுத்துள்ளது. காலிஸ்தான் பிரிவினைவாதியின் கொலையில் இந்தியாவுக்கு தொடர்பு இருப்பதாக கடந்த ஓராண்டுக்கு முன்பு ட்ரூடோ குற்றம்சாட்டினார். இந்த நிலையில் லாவோஸில் நடைபெற்ற ‘ஆசியான்’ உச்சிமாநாட்டில் பங்கேற்ற போது பிரதமர் மோடியை சந்தித்ததாக சிபிசி என்ற கனடா செய்தி நிறுவனத்துக்கு ஜஸ்டின் ட்ரூடோ பேட்டியளித்தார்.