மெக்சிகோவில் சூப்பர் மார்க்கெட்டில் நிகழ்ந்த பயங்கர வெடி விபத்தில் 23பேர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மெக்சிகோவில் வடமேற்கு நகரமான ஹெர்மோசிலோவில் உள்ள சூப்பர் மார்க்கெட்டில் திடீரென வெடிவிபத்து ஏற்பட்டு அதிலிருந்து வெளியேறிய நச்சு வாயுக்களை சுவாசித்ததால் உயிரிழப்புகள் நிகழ்ந்ததாகவும், விபத்தில் 11பேர் காயமடைந்ததாகவும் கூறப்படுகிறது. பலியானவர்களில் பெரும்பாலானவர்கள் குழந்தைகள் என கண்டறியப்பட்ட நிலையில் வெடி விபத்துக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.