20 ஆண்டுகளாக தனது மனைவி, ஏழு குழந்தைகள் மற்றும் மாமியார் ஆகியோரை வீட்டு சிறையில் அடைத்து வைத்து பாலியல் துன்புறுத்தல் அளித்த வந்த 54 வயது கொடூரனை போலீசார் கைது செய்தனர். பிரேசிலின் நோவோ ஓரியண்டேயில் வசித்து வரும் அந்நபர், திருமணம் முடிந்ததில் இருந்து தனது மனைவியை யாருக்கும் அறிமுகம் செய்யாமல் வீட்டிலேயே அடைத்து வைத்திருந்ததாக கூறப்படுகிறது. அதேபோல் 3 முதல் 22 வயதுக்குட்பட்ட தனது 7 குழந்தைகளுக்கும் பாலியல் துன்புறுத்தல் கொடுத்ததோடு கருக்கலைப்பு செய்ய வைத்ததாகவும் தெரிகிறது. இந்நபரின் தொடர் சித்ரவதையால் அவரின் மாமியார் உடல் நலம் பாதிக்கப்பட்டு உயிரிழந்தார். இந்நிலையில் தான் அவருக்கு தூக்க மாத்திரை கொடுத்துவிட்டு, மகள் ஒருவர் வீட்டில் இருந்து வெளியேறி போலீசிடம் புகார் அளித்துள்ளார்.