பாகிஸ்தானில் சமீபத்தில் கொண்டு வரப்பட்ட அரசியலமைப்பு சட்ட திருத்த மசோதாவிற்கு எதிர்ப்பு, தெரிவித்து மூன்றாவதாக மற்றொரு நீதிபதியும் ராஜினாமா செய்துள்ளார். பாகிஸ்தானில் ராணுவ தளபதி அசிம் முனீரின் பதவி நீட்டிப்புக்கு ஏதுவாக, 243வது சட்டப் பிரிவில் திருத்தம் செய்யும் வகையில், 27வது அரசியலமைப்புச் சட்ட திருத்தம் மேற்கொள்ளப்பட்டது. இந்த மசோதாவுக்கு அந்த நாட்டின் நாடாளுமன்றம் ஒப்புதல் அளித்துள்ளது. இந்த மசோதாவில், உச்ச நீதிமன்றம் நாட்டின் உயர்ந்த நீதித்துறை அமைப்பு என்ற அந்தஸ்தை இழக்கும் வகையில் மாற்றங்கள் கொண்டு வரப்பட்டதாகக் கூறி, ஏற்கனவே 2 நீதிபதிகள் ராஜினாமா செய்தனர்.