சீனாவில் மக்கள் பயன்பாட்டுக்காக திறக்கப்பட்டு சில மாதங்களே ஆன ஹோங்கி பாலம் நிலச்சரிவால் தரைமட்டமான வீடியோ காட்சி வெளியாகியுள்ளது.தென்மேற்கு சீனாவில் சிச்சுவான் மாகாணத்தில் சீனாவின் மையப்பகுதியை திபெத்துடன் இணைக்கும் ஹோங்கி பாலம் சமீபத்தில் திறக்கப்பட்டது. மேர்காங் நகரில் உள்ள ஷுவாங்ஜியாங்கோ நீர்மின் நிலையத்திற்கு அருகே ஏற்பட்ட பெரும் நிலச்சரிவால் மலைப்பகுதி இடிந்து விழுந்து, தூண்களும் இடிந்து பாலம் மண்ணோடு மண்ணாக மாறியது. விபத்தின் போது பாலத்தில் எந்த வாகனங்களும் செல்லாததால் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.