அமெரிக்காவின் தாக்குதலில் அணுசக்தி நிலையங்கள் பலத்த சேதமடைந்ததாக ஈரான் முதன்முறையாக ஒப்புக் கொண்டுள்ளது. இஸ்ரேலுக்கு ஆதரவாக ஈரானின் 3 அணுசக்தி தளங்கள் மீது அமெரிக்கா பி2 குண்டுவீச்சு விமானங்கள் மூலம் தாக்குதல் நடத்தியது. இதில், 3 அணு சக்தி தளங்களும் அழிந்ததாக அதிபர் ட்ரம்ப் கூறியதை ஈரான் அரசு மறுத்து வந்தது. இந்த சூழலில், அமெரிக்காவின் தாக்குதலில் அணுசக்தி தளங்கள் சேதமடைந்தது உண்மைதான் என ஈரான் ஒப்புக்கொண்டுள்ளது. ஃபோர்டோ, நடான்ஸ் மற்றும் இஸ்ஃபஹான் ஆகிய அணுசக்தி தளங்கள் சேதமடைந்ததாக ஈரான் வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் உறுதிப்படுத்தியுள்ளார். மேலும், அமெரிக்காவின் தாக்குதலுக்கு தக்க பதிலடி தருவோம் என்றும் ஈரான் எச்சரித்துள்ளது.இதையும் படியுங்கள் : பாரம்பரிய சாவோ ஜோவோ திருவிழா கொண்டாட்டம்..