20 பேருடன் சென்ற துருக்கி ராணுவ விமானம் நடுவானில் தீப்பிடித்து விழுந்து நொறுங்கியதில் விமானத்தில் பயணத்த அனைவரும் பரிதாபமாக உடல் கருகி உயிரிழந்தனர். அஜர்பைஜானில் இருந்து புறப்பட்டு துருக்கி சென்ற C-130 ரக விமானம் ஜார்ஜியாவில் தீப்பிடித்து விழுந்த பரபரப்பு காட்சிகள் வெளியாகியுள்ளது. அஜர்பைஜான் நாட்டின் எல்லைப்பகுதியில் விபத்து நிகழ்ந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.