ஏமன் நாட்டில் உள்ள ஹவுதி கிளர்ச்சியாளர்கள் இஸ்ரேலின் விமான நிலையம் மீது நடத்திய தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக தற்போது ஏமன் மீது இஸ்ரேல் ராக்கெட் தாக்குதலை தீவிரப்படுத்தியுள்ளது. ஏமனின் ஹொடெய்தா துறைமுகத்தை குறிவைத்து நடத்தப்பட்ட இந்த ராக்கெட் தாக்குதலில் துறைமுகம் கொழுந்துவிட்டு எரிந்து நாசமானது.