போர் நிறுத்த ஒப்பந்தத்தின் முக்கிய பகுதியான பிணைக் கைதிகள் விவகாரத்தில், பாலஸ்தீனத்தின் முக்கிய தலைவரை விடுவிக்க இஸ்ரேல் மறுத்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கடந்த 2023 அக்டோபர் 7-ஆம் தேதி இஸ்ரேல் - ஹமாஸ் இடையே போர் தொடங்கி, 2 ஆண்டுகளுக்கும் மேலாக நீடித்து வந்த நிலையில், போரை முடிவுக்கு கொண்டுவர அமெரிக்க அதிபர் ட்ரம்ப் முயற்சி மேற்கொண்டார். இதன் பயனாக, இஸ்ரேல் அரசு போர் நிறுத்த ஒப்பந்தத்தின் முதல்கட்டமாக அதிகாரப்பூர்வமாக ஒப்புதல் அளித்து போர் நிறுத்தம் அமலுக்கு வந்ததாகவும் அறிவித்தது. இந்த சூழலில், திடீர் திருப்பமாக பிணைக் கைதிகளை விடுவிக்கும் விவகாரத்தில் முக்கிய பாலஸ்தீன தலைவரான மர்வான் பர்ஹாட்டியை விடுதலை செய்ய இஸ்ரேல் மறுத்துள்ளது.