பாலஸ்தீனியர்களுக்கு எதிராக இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதல்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஏமனில் மாபெரும் மக்கள் பேரணி நடைபெற்றது. ஏமன் தலைநகர் சனாவில் வாரந்தோறும் பேரணி நடைபெற்று வருகிறது. அதனடிப்படையில், பாலஸ்தீன மக்களுக்கு ஆதரவு தெரிவித்தும், இனப்படுகொலை செய்து வருவதாக இஸ்ரேலுக்கு எதிராகவும் ஒன்று கூடிய மக்கள் கையில் பதாகைகளை ஏந்தி தங்களது உணர்வுகளை வெளிப்படுத்தினர்.