தங்கள் எல்லைக்கு அருகில் உள்ள ஹிஸ்புல்லா உள்கட்டமைப்பை குறிவைத்து குறிப்பிட்ட இலக்குகளில் மட்டுமே தாக்குதல் நடத்துவதாக இஸ்ரேலிய அதிகாரிகள் தங்களுக்குத் தெரிவித்ததாக அமெரிக்கா கூறியுள்ளது. ஹிஸ்புல்லா குழு தலைவர் ஹசன் நஸ்ரல்லா வான்வழித் தாக்குதலில் கொல்லப்பட்ட இரு நாட்களுக்கு பிறகு லெபனான் எல்லைக்குள் உள்ள ஹிஸ்புல்லாக்களை குறிவைத்து இஸ்ரேல் ராணுவம் தரைவழித் தாக்குதலை திங்கள்கிழமை தொடங்கியது. இது முழுமையான படையெடுப்பாக இல்லாமல் குறிப்பிட்ட இலக்குகளில் மட்டும் நடத்தப்படும் துல்லிய தாக்குதலாக இருக்கும் என கருதப்படும் நிலையில், இதனால் மத்திய கிழக்கு நாடுகளில் நெருக்கடி மேலும் மோசமாகும் என அஞ்சப்படுகிறது.