காசா முனை பகுதியில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 21 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டனர். மேலும், பலர் காயம் அடைந்துள்ளனர். காசாவில் இஸ்ரேல் ராணுவம் நடத்தி வரும் போரில், ஹமாஸ் ஆயுதக்குழுவினர் உள்பட இதுவரை 52 ஆயிரத்து 600-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இதனிடையே, ஹமாஸ் ஆயுதக் குழுவின் பிடியில் இன்னும் 59 பேர் பணய கைதிகளாக உள்ள நிலையில், அதில் 25- க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.