பாலஸ்தீன கைதி துன்புறுத்தப்பட்ட வீடியோ கசிந்ததை அடுத்து, இஸ்ரேல் ராணுவத்தின் பெண் உயரதிகாரி தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். காசா தாக்குதலின் போது கைது செய்யப்பட்ட பாலஸ்தீன கைதியை, இஸ்ரேல் ராணுவ வீரர்கள் துன்புறுத்திய வீடியோ கசிந்ததை அடுத்து, அதில் இடம்பெற்ற 5 வீரர்களுக்கு எதிராக வழக்கு பதிவு செய்யப்பட்டு குற்றவியல் விசாரணை நடைபெற்று வருகிறது. இந்நிலையில் வீடியோ கசிவிற்கு பொறுப்பேற்று, இஸ்ரேல் ராணுவத்தின் முதன்மை சட்ட அதிகாரியான மேஜர் ஜெனரல் யிஃபாத் டோமர்-யெருஷால்மி தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.