ஹிஸ்புல்லா அமைப்பின் பிந்த் பெயில் பிரிவைச் சேர்ந்த அலி அபித் அல்-காதர் இஸ்மாயில் என்ற மூத்த தளபதியை படுகொலை செய்ததாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக இஸ்ரேல் பாதுகாப்பு படைகள் வெளியிட்ட செய்தியில், தெற்கு லெபனானில் பயங்கரவாத அமைப்பை புனரமைப்பு செய்யும் முயற்சிகளில் அலி அபித் அல்-காதர் ஈடுபட்டு வந்ததாக தெரிவித்து உள்ளது. மேலும் இஸ்ரேலுக்கு அச்சுறுத்தலாக உள்ள எதனையும் நீக்கும் நடவடிக்கையில் தொடர்ந்து ஈடுபடும் என்றும் அறிவித்துள்ளது.