இஸ்ரேல் - ஹெஸ்புல்லா அமைப்புக்கு இடையேயான போர் நிறுத்த ஒப்பந்தம் அமலுக்கு வந்ததை தொடர்ந்து, தெற்கு லெபனானில் இருந்து வெளியேறிய மக்கள், மீண்டும் தங்கள் நாட்டுக்கு திரும்ப ஆரம்பித்துள்ளனர். கடந்த 14 மாதங்களில், லெபனானின் தென் பகுதியில் இருந்து சுமார் 12 லட்சம் மக்கள் வெவ்வேறு பகுதிகளுக்கு புலம் பெயர்ந்தனர். தற்போது போர் நிறுத்த ஒப்பந்தம் அமலுக்கு வந்ததால், தங்களுடைய உடைமைகளுடன், கார்கள் மற்றும் வேன்களில் மக்கள் சாரை சாரையாக, பெய்ரூட்டில் இருந்து தென் பகுதிக்கு திரும்பி வருகின்றனர். மேலும், போரில் சேதமடைந்த வீடுகளுக்குள் சென்ற மக்கள், அங்கிருந்த பொருட்கள் அனைத்தும் சின்னாபின்னமாகி கிடப்பதை கண்டு வேதனை அடைந்தனர்.